அதிரை எக்ஸ்பிரஸ்:- ரமலான் பிறை தென்பட்டு கடந்த மாதம் (16.05.2018) உலகமெங்கும் நோன்பு நோர்க்க ஆரம்பித்தனர்.
அதேபோல் அதிரைலும் நோன்பு நோர்க்க ஆரம்பித்தனர்.
அதிரையில் இரவு நேரங்களில் தொழுகைகள்,ஹதீஸ்கள் பல்வேறு பள்ளிகளில் நடைபெற்றுவருகின்றது.இதில் இளைஞர்கள்,பெரியோர்கள் கலந்துகொள்வார்கள்.
அது ஒருபுறமிருக்க நள்ளிரவு 2 மணி ஆனதும் இளைஞர்கள் பலர்,அவர்களது தெருக்களிலிருந்து வெளியூர்களுக்கு ரௌண்ட்ஸ் என்ற பெயரில் இரவு நேரங்களில் அதிரை பக்கத்தில் அமைந்துள்ள கிராமங்களில் இளைஞர்கள் பலர் கிராமவாசிகளை தொந்தரவு செய்யும் வகையில் பைக்கில் சென்று சத்தத்தை கூட்டிக்கொண்டும்,கத்திக்கொண்டும் செல்கின்றார்கள் அதுமட்டுமின்றி தொந்தரவும் செய்கின்றார்கள் என்று அதிரை காவல் நிலையத்தில் கிராமவாசிகள் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து அதிரை அனைத்து முஹல்லா ஜமாத் நிர்வாகிகள் மற்றும் அனைத்து முஹல்லா வாசிகளுக்கு அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நாளை (02.06.2018) மாலை 04.30 மணியளவில் காவல்துறை ஆய்வாளர் முன்னிலையில் நடைபெறவுள்ளது.
அதுசமயம் அதிரை அனைத்து முஹல்லா வாசிகள் அனைவரையும் தவராது கலந்துகொள்ளுமாறு சம்சுல் இஸ்லாம் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
Your reaction