தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரை பகுதியில் மதரஸத்துள் மஸ்னி பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளி குறைந்த அளவு மக்களே தொழும் பள்ளியாகும்.,
இந்த பள்ளிவாசலில் இந்த வருடம் 2018ற்கான நோன்பு திறக்க நோன்பு கஞ்சிகள் மற்றும் வடை, சமோசா, பேரீச்சம் பழம் போன்றவைகள் நோன்பாளிகளுக்கு மட்டுமின்றி மாற்றுமத சகோதரர்களுக்கும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில்,இந்த பள்ளிவாசலுக்கு முதல் 10நோன்புகளுக்கு நோன்பு கஞ்சி மற்றும் இதர உணவு பொருள்கள் வழங்க பலர் முன்வந்து அதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது.
இன்னும் மீதம் உள்ள கடைசி 20 நோன்புகளுக்கு நோன்பு கஞ்சி மற்றும் இதர உணவு பொருட்கள் வழங்க யாரும் முன்வராத நிலையிலும், நிதி வசதி இல்லாத நிலையில் அதிரை மக்களிடம் உதவும் படி அதிரை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த பள்ளிக்கு நிதி உதவி வழங்க விரும்புவோர் கீழே உள்ள தொடர்பு எண்ணை தொடர்பு கொள்ளவும்.
மேலும் தகவலுக்கு:- முகமது அஸ்லம்,
9500565106
Your reaction