தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சாலை துவரங்குறிச்சியில் நேற்று (02/05/18) புதன்கிழமை பட்டுக்கோட்டை தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது சில விரோதிகள் நடத்திய தாக்குதலில் ஓட்டுநர் பலத்த காயத்துடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று (03/05/18) வியாழக்கிழமை தமுமுக சார்பில் தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக, மமக தலைவர் அஹமது ஹாஜா அவர்களின் தலைமையில் 20க்கு மேற்பட்ட நிர்வாகிகள் சேர்ந்து அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஓட்டுநர் ராஜா முஹம்மது அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன் பிறகு பட்டுக்கோட்டை காவல் நிலையம் சென்று உதவி ஆய்வாளரை சந்தித்து தாக்கியவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தினர். உதவி ஆய்வாளரும் குற்றவாளிகள் மீது இரண்டு நாட்களில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
மேலும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமுமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Your reaction