டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி நெல்லையில் 12ம் வகுப்பு முடித்த தினேஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரது தந்தை கடந்த சில வருடங்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் தினேஷ் வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இதனால் தினேஷ் சரியாக படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நெல்லையின் தெற்கு புறவழிச்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், தினேஷின் பிரேதத்தை மீட்டனர். அப்போது அவரது பையில் ஒரு கடிதம் இருந்தது.
தற்கொலைக்கு முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். கடிதத்தில் தந்தையின் மதுபழக்கத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன், தயவு செய்து டாஸ்மாக்கை மூடுங்கள் மூட இல்லையென்றால் நான் ஆவியாக வந்து மது கடைகளை ஒளிப்பேன் என்று எழுதியுள்ளார்.
Your reaction