பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் சேர்ந்த வாலிபர் வாகன விபத்தில் பலி
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர்
பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மகன் பைசல் (வயது 24) இவர் மதுக்கூரில் ஆட்டோ ஓட்டும் பணி செய்துக்கொண்டு வந்தார். இவர் நேற்று (24.04.2018)செவ்வாய்க்கிழமை இரவு பட்டுக்கோட்டை பள்ளி வாசல் தெருவில் உள்ள தனது நன்பரின் திருமண விழாவிற்க்கு சென்றுள்ளார். அந்த விழாவை முடித்து விட்டு ஊர் திரும்பும் போது பட்டுக்கோட்டை அருகே உள்ள வளவன்புறம்(கைகாட்டி) புறத்தில் சாலை ஓரத்தில் மணல் மூட்டையின் மீது வாகனம் ஏற்றியதில் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகியது.
இவர்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் வாலிபர் பைசல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Your reaction