தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூர் ஊரைச் சேர்ந்த அசோக்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளைஞரும் அதே பகுதியை சேர்ந்த உஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் காதலித்து வந்தனர்.
இதனையடுத்து, இருவரும் வீட்டை விட்டு ஓடி தலைமறைவானர்.
இந்நிலையில் தலைமறைவானதையொட்டி இரு குடும்பத்தாரும் அதிரை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, அந்த இளைஞரின் சகோதரர் கணேசன் நேற்று(03/04/2018) அதிரை பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தார், அவரை புதுக்கோட்டை உள்ளூர் பகுதியை சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீர் என கட்டை மற்றும் கல்லால் அடித்து அதிரை பேரூராட்சி அலுவலகம் எதிர் புறம் வரை துரத்தி உள்ளனர்.
இந்நிலையில், அங்கு மக்கள் கூட்டம் கூடியதால் கணேசனை தாக்கிய அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
படுகாயமடைந்த கணேசனை அங்குள்ளவர்கள் மீட்டு அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று பட்டுகோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
சாதி மாறி திருமணம் செய்ததன் காரணமாக ஒரு இளைஞனை 100க்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில் அடித்து கொலை செய்த சம்பவம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Your reaction