உள்நாட்டு செய்திகள் வங்கிகள் இன்று இரவு 8 மணி வரை செயல்படும்…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு !! Posted on March 31, 2018 at 9:41 am by நெறியாளன் 1536 0 இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் இன்று இரவு 8 அணி வரை செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி , நேற்று புனிதவெள்ளி நாளை ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை, ஏப்ரல் 2 ஆம் தேதி வங்கி ஆண்டு கணக்கு முடியும் நாள் என தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாக உள்ளது.. ஆனால், தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளித்தால், மக்களுக்கு பணப்பரிவர்த்தனை செய்வதில் பாதிப்பு உண்டாகும் என்பதால், இன்று சனிக்கிழமை இரவு 8 மணிவரை அனைத்து வங்கிகளும் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தவிர, ஆன்லைன் பரிவர்த்தனைகள் இரவு 12 மணிவரை செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவோரின் வசதிக்காக இன்று இரவு 8 மணி வரை வங்கிகள் செயல்பட வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. Source:- Asianet_news|தமிழன் எக்ஸ்பிரஸ். Like this:Like Loading...
கடந்த வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி , நேற்று புனிதவெள்ளி நாளை ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை, ஏப்ரல் 2 ஆம் தேதி வங்கி ஆண்டு கணக்கு முடியும் நாள் என தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாக உள்ளது.. ஆனால், தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளித்தால், மக்களுக்கு பணப்பரிவர்த்தனை செய்வதில் பாதிப்பு உண்டாகும் என்பதால், இன்று சனிக்கிழமை இரவு 8 மணிவரை அனைத்து வங்கிகளும் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தவிர, ஆன்லைன் பரிவர்த்தனைகள் இரவு 12 மணிவரை செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவோரின் வசதிக்காக இன்று இரவு 8 மணி வரை வங்கிகள் செயல்பட வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
Your reaction