Friday, March 29, 2024

“எக்ஸ்பிரஸ் சமையல்”உடல் எடையை குறைக்கும் சோயா காய்கறி ஊத்தப்பம் செய் முறை..!

Share post:

Date:

- Advertisement -

“எக்ஸ்பிரஸ் சமையல்”உடல் எடையை குறைக்கும் சோயா காய்கறி ஊத்தப்பம் செய் முறை..!

எடையைக் குறைப்பதில் சோயாவுக்கு முக்கிய பங்குண்டு. இன்று சோயா பீன்ஸ் வைத்து ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்கும் சோயா காய்கறி ஊத்தப்பம்
தேவையான பொருட்கள் :

சோயா பீன்ஸ் – அரை கப்,
கடலைமாவு – அரை மேஜைக்கரண்டி,
உப்பு – தேவைக்கேற்ப,
புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை – அரை கப்,
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்,
ப.மிளகாய், இஞ்சி, விழுது – 1 டீஸ்பூன்,
வெங்காயம் – 2,
துருவிய கேரட், முட்டை கோஸ் – ¼ கப்

செய்முறை :

புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சோயா பீன்ஸ், முதல் நாள் இரவே ஊறவைத்து, மைய அரைத்து கொள்ளவும்

அடுத்த நாள் காலையில் கடலைமாவு, உப்பு, [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை தடிமனாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை அகியவற்றை தூவவும். தோசைக் கரண்டியால் லேசாக அழுத்தி விடவும்.

ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

சத்தான சோயா காய்கறி ஊத்தப்பம் ரெடி.

 

       

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...