100 கிராம் வெங்காயத்தில் அடங்கி உள்ள சத்துக்கள்
ஈரப்பதம் – 86.6%
புரதம் – 1.2%
கொழுப்புச்சத்து – 0.1%
நார்ச்சத்து – 0.6%
தாதுச்சத்து – 0.4%
மாவு சத்து (கார்போஹைட்ரேட்டுகள்) – 11.7%
சின்ன வெங்காயத்தின் மருத்துவ பயன்கள்:
வெங்காயத்தை பச்சையாக மென்று உண்டு வந்தால் சிறுநீரை நன்கு வெளியாகும்.
உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.
இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயத்தைத் தினமும் உணவில் சேர்த்து வருவது நல்லது.
வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிடலாம். இதனால் சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும்.
வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் கட்டிகள் தோன்றும், இதற்கு, வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் வெகுவிரைவில் நிவாரணம் கிடைக்கும்.
Your reaction