ராமேஸ்வரம் பகுதியில் பலத்தக் காற்று வீசுவதால், மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் பாம்பன் பாலத்தை கடக்க முடியாமல் இரண்டு கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தென்கிழக்கு கடல்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாலத்தீவு அருகே நிலை கொண்டுள்ளதால், அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், தூத்துக்குடியில் இருந்து கடலூர் நோக்கி புறப்பட்ட இரண்டு கப்பல்கள் பாம்பன் தூக்குபாலத்தை கடக்க அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
காற்றின் வேகம் குறைந்த பிறகே அனுமதியளிக்கப்படும் என தெரிவித்துள்ளதால், இரண்டு கப்பல்களும் கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனிடையே ராமேஸ்வரம் கடல்பகுதியில் மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Your reaction