தமிழக அரசின் மானிய ஸ்கூட்டர் திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் பெண்களுக்கு ‘ஸ்கூட்டர் மானியம்’ திட்டத்தின் கீழ் நிதி வழங்கிட ஆண்டுக்கு 200 கோடி ரூபாயை ஒதுக்கிட முடிவு செய்திருக்கிறது தமிழக அரசு.
ஸ்கூட்டர் மானியம் பெற விரும்பும் பெண்களுக்கான தகுதிகள் என்னென்ன? அதை பெற எப்படி விண்ணப்பிப்பது? போன்ற தகவல்களை அந்தந்த மாவட்ட ஆட்சியரகம் சார்பில் மீடியாக்கள் மற்றும் பத்திரிக்கைகளின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து வரும் 24 ஆம் தேதி மானிய ஸ்கூட்டர் திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
இதனிடையே போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது தமிழக அரசு நிதி பற்றாக்குறை இருப்பதாக கூறி இழுக்கடித்தது. ஆனால் போராட்டம் தொடர்ந்ததால் ஊதிய உயர்வு அமலுக்கு வந்தது.
இந்நிலையில், தமிழக அரசின் மானிய ஸ்கூட்டர் திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராம் குமார் என்பவர் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை இருக்கும் இச்சமயத்தில் எதற்கு மானிய ஸ்கூட்டர் திட்டம் எனவும் அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
Your reaction