தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மதுக்கூர் பெரியக்கோட்டை பகுதியில் வசித்து வந்த ரவி அவர்களின் மகன் சந்தோஷ் என்கிற மாணவன் பட்டுகோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 12 வகுப்பு பயின்றுவந்தார்.
இவர் ஒரு சில தினங்களுக்கு முன்பு அந்த தனியார் பள்ளி ஆசிரியர் கடுஞ்சொற்களால் திட்டி பள்ளியை விட்டு வெளியே மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவனின் உறவினர்கள் மாணவனின் அந்த தனியார் பள்ளியில் இதுகுறித்து முறையிட சென்றபோது சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என்றும் அலச்சியப்படுத்தியதாகவும் தகவல் தெருவிக்கின்றனர்.
இந்நிகழ்வால், மேலும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் இன்று(16/02/2018) மதுக்கூர் வடக்கு பெரமையா கோவில் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில ஊடக பிரிவு செயலாளர் மதுக்கூர் ஃபவாஸ் தலைமையில் தமுமுகவினறும் கலந்து கொண்டனர்.
அரைமணிநேரத்திற்கும் மேலாக சாலை மறியல் நீடித்ததால் பட்டுக்கோட்டை மற்றும் மன்னார்குடி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Your reaction