தஞ்சை தெற்கு மாவட்ட பட்டுகோட்டை ஒன்றியம் அதிராம்பட்டினத்தில்
திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
முழு செய்தி:-
தஞ்சை மாவட்டம்
பட்டுகோட்டை ஒன்றியம் திமுக பேரூர், ஊராட்சி கழகம், வார்டு கிளை கழகதின்ஆய்வு கூட்டம் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது.
இதன் ஒருபகுதியாக அதிரையில் இன்று(14/02/2018) மாலை 6மணிக்கு சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்திற்கு திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம் அவர்களும், திமுகவின் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அ. பழனியப்பன் அவர்களும் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில், திமுக பேரூர் கழக தலைவர் இராம. குணசேகரன், முன்னாள் சேர்மன் S.H.அஸ்லம் மற்றும் நிர்வாகிகள் , உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தின் பொருள் மினிட் புத்தகம், வாக்கு சாவடி முகவர்கள், கழக ஆக்கப் பணிகள், கழக நிகழ்ச்சிகள் நோட்டிஸ்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது.
Your reaction