தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மனிதநேய மக்கள் கட்சி 10ம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு கொடி ஏற்றும் மற்றும் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.
கோட்டை முதல் குமரி வரை கிழக்கு கடற்கரை சாலை வழியே
ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமுமுக/மமக மாநிலத் தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லாஹ் கலந்துகொண்டு கொடி ஏற்றி வைத்து பேசினார்.
நிகழ்ச்சிக்கு, தமுமுக / மமக அதிரை பேரூர் தலைவர் எம்.சாகுல் ஹமீது தலைமை வகித்தார். மமக மாநில அமைப்புச் செயலாளர்கள் வழக்குரைஞர் தஞ்சை பாதுஷா, தாம்பரம் யாகூப், தமுமுக/மமக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா, தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஓ செய்யது முகமது புஹாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மமக அதிரை பேரூர் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, தமுமுக அதிரை பேரூர் துணைச் செயலாளர் எம்.ஆர் கமாலுத்தீன், மாவட்ட துணைச்செயலர் எஸ்.எஸ் சேக்காதியார், தமுமுக/மமக அதிரை பேரூர் பொருளாளர் முகமது யூசுப் உட்பட தமுமுக / மமகவினர் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு,
Your reaction