Thursday, March 28, 2024

சிறப்பாக நடந்து முடிந்த அய்டா வெள்ளி விழா..!

Share post:

Date:

- Advertisement -

ஜித்தாவில் இயங்கி வரும் அதிரை அய்டா அமைப்பு தொடங்கப்பட்டு 25 வது ஆண்டை சிறப்பிக்கும் வண்ணம் 09 -02- 2018 வெள்ளிக்கிழமை அன்று ஜித்தாவில் அய்டாவின் வெள்ளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காலை 08 மணிக்கு நிகழ்ச்சிக்கு அனைவரும் வர தொடங்கினர். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை அய்டாவின் தலைவர் சகோ. ஏ.ஜே.தாஜுத்தீன் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியின் அமீராக இருந்து அய்டாவின் செயலர் சகோ. சம்சுதீன் நிகழ்ச்சியினை நடத்தினார். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை, சகோ. ஹபிபுர்ரஹ்மான. சகோ.தமீம், (அல்சுஐபி)சகோ. ஜபருல்லாஹ் பதிந்தனர். அய்டா பொருளாளர்கள். சகோ. அப்துல் அஜீஸ், சகோ. இப்ராகிம் ஆகியோர் நிகழ்ச்சியின் பொருளாளர்களாக இருந்தனர்.

சிறுவன் அப்துல் பாசித் கிராத் ஓதினார்.

நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் சகோ. பத்ர், சகோ. சுவைஃப் & டீம் சார்பில் காலை உணவு மற்றும் தேநீர் வழங்கப்பட்டது. பின்பு சகோ. மீராசாஹ் ரஃபியா, சகோ.அப்துல் அஜீஸ் தலைமையில் விளையட்டுப் போட்டிகள் நடந்தன. இவர்களுக்கு சகோ.இப்ராஹிம், சகோ ஷம்சுதீன்(அல்பைக்) உறுதுணையாக இருந்து விளையாட்டுப் போட்டிகளை நடத்தினர். காலை 11 மணிக்கு மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடந்தது. இதனை சகோ.ஜஃபருல்லாஹ், சகோ. சரபுதீன்(கோர்ட்டினா),சகோ. முனாஸ்கான் ஆகியோர் நடத்தினர்.

பேச்சுப்போட்டியின் தலைப்பாக,

1 சதக்கத்துல் ஜாரியா நிரந்தர நன்மை, 2 சுத்தம் ஈமானில் பாதி, 3 மொபைல் இல்லாத என் வாழ்க்கை, 4 பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் கடமைகள், 5, நபி (ஸல்) அவர்களின் நற்பண்புகள் என்ற தலைப்பில் கலந்துகொண்டு பேசிய மாணவர்களின் பேச்சுக்கள் பார்வையாளர்களை வெகுவாக கவந்தது. காலை 11:45 முதல் 12:15 வரை நீச்சல். அதனை தொடர்ந்து ஜும்ஆ தொழுகைக்கு இடைவெளி விடப்பட்டது.

ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து அனைவருக்கும் பகல் உணவு வழங்கப்பட்டது. உணவு விநியோகிக்கும் பொறுப்பு சகோ. ஜெய்லானி(அப்துல் காதிர்), சகோ. அஜ்வா நெய்னா, சகோ அஷ்ரப் ஆகியோர் மிகவும் சிறப்பாக செய்தனர். பின்பு ஹாபிள் நெய்னா தலைமையில் மாணவர்களுக்கான கிராத் போட்டி நடந்தது. இதில் சிறப்பாக கிராத் ஓதியவர்களை பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தினர்.

அதனை தொடர்ந்து சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், சீனியர்களுக்கான வாலிபால் போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து. அய்டாவின் முன்னாள் தலைவர் சகோ. ஆபிதீன் அய்டாவின் தோற்றம் வளர்ச்சி குறித்து விளக்கம் அளித்தார். மேலும் அய்டா ஆலோசனைக்குழு உறுப்பினர் சகோ. எம்.எஃப். அஹமது அஸ்லம் அய்டாவின் சாதனைகள் மற்றும் எவ்வாறு செயல்படுகிறது? என்பது குறித்து விளக்கம் அளித்தார். மேலும் அதிரை பைத்துல்மாலிலிருந்து வந்த வாழ்த்து, அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை அனுப்பிய வாழ்த்து, அதிரை பைத்துல்மால் தம்மாம் கிளையிலிருந்து சகோ. ஃபத்ஹுத்தீன் அனுப்பிய வாழ்த்து மற்றும் அய்டாவின் முன்னாள் தலைவர் சகோ ரஃபியா அனுப்பிய வாழ்த்துரை ஆகியவை பகிரப்பட்டன. மாலை சிற்றுண்டி தேநீர் வழங்கப்பட்டது. மஃரிப் தொழுகைக்குப் பிறகு சகோ முனாஸ்கான் அய்டாவில் இளைஞர்களின் பங்களிப்பின் அவசியம் குறித்து பேசினார்.

அதனை தொடர்ந்து வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுக்குரிய வெற்றியாளர்களின் பெயரை அய்டாவின் தலைவர் சகோ. ஏ.ஜே.தாஜுத்தீன் அறிவித்தார். மேலும் அய்டாவின் 25 வது ஆண்டை சிறப்பிக்கும் நினைவு பரிசினை அய்டாவின் நிர்வாகிகள் கையில் முன்னாள் நிர்வாகிகள் வழங்கினர். விழாவின் பரிசுப் பொருட்களுக்கு ஸ்பான்சர்களாக சகோ. A. K. சாகுல் ஹமீது அவர்கள். மற்றும் சகோ. ஆபிதீன் அவர்கள் (கோ கோ கோலா) . இந்நிகழ்ச்சி ஆண்கள், பெண்கள் என தனித்தனியே அமையப்பெற்ற சிறப்பு இஸ்திராஹாவில் இருபாலருக்கும், மற்றும் சிறுவர்களுக்கும் என தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி அய்டா தலைவர் சகோ. ஏ.ஜே.தாஜுத்தீன் நன்றியுரை வழங்க இஷா தொழுகையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. அய்டா வெள்ளிவிழா நிகழ்ச்சியில், ஜித்தா, மதீனா, அப்ஹா என சவுதியின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் அதிரையர்கள் குடும்பத்துடன் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

https://www.youtube.com/watch?v=V10im-Di1D8&feature=youtu.be

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...