தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சுமார் 25வருடங்களுக்கு முன்பு அதிரை இளைஞர் மேம்பாட்டு சங்கம்(AYDA-Adirai youth development association) என்ற இந்த அமைப்பு துவங்கப்பட்டது.
இந்த அமைப்பின் மூலம் அதிரை மற்றும் ஜித்தா வாழ் அதிரையர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டுவடுகிறது.
இதனையடுத்து, சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தாவில் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா அந்த அமைப்பின் சார்பில் வருகிற 09ஆம் தேதி பிப்ரவரி மாதம் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு ஜித்தா வாழ் அதிரையர்களுக்கு குடுபத்துடன் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அமைப்பின் வெள்ளிவிழாவை தொடர்ந்து ஜித்தாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி இடவசத்தியுடன் காலை மற்றும் மதிய உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வயது வரம்பு இல்லாமல் நிகழ்ச்சிக்கு வரும் அனைவருக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் அதிரை வாசிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி அந்த அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பு:-
1). நிகழ்ச்சிக்கு வரும் அனைவருக்கும் முன்பதிவு அவசியம்..
2). நுழைவு சீட்டிற்கு
AYDA நிர்வாகத்தை அணுகவும்…
3).நிகழ்ச்சிக்கு வர வாகன வசதி இல்லாதோர் நிர்வாகத்தை அணுகவும்…
4).நிகழ்ச்சியின் இடம் புகைப்படத்தில் காணவும்.
Your reaction