சென்னையில் முதல் முறையாக “பைக் டாக்சி”….! மிக குறைந்த கட்டணத்தில்…!

1655 0


சென்னையில் முதல் முறையாக “பைக் டாக்சி”….!

இந்தியாவிலேயே முதல் முறையாக பைக் டாக்சியை தொடங்கி உள்ளனர் மாற்று திறனாளிகள்.

மாற்று திறனாளிகள் பலர் ஒன்றாக இணைந்து ” மா உலா” என்ற பெயரில் பைக் டாக்சி சேவையை தொடங்கி உள்ளனர்

இந்த வாகனத்தில்,

முன்புறம் பின்புறம் பைக் டாக்சி என எழுதப்பட்டிருக்கும்

தொடர்பு எண்: 7358057020 என ஒட்டப்பட்டிருக்கும்.

எந்தெந்த இடத்தில் பயன்பாட்டில் உள்ளது தெரியுமா..?

முதலாவதாக 10  வாகனங்களை கொண்டு சென்னை சென்ட்ரல்,எழும்பூர்,மெரீனா, பிராட்வே உள்ளிட்ட இடங்களிலும், சென்னையை சுற்றி சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு தங்களது சேவையை செய்கின்றனர்.

முதல் 2 கிலோ மீட்டருக்கு, அடிப்படை தொகையாக 25 ரூபாய் என நிர்ணயம் செய்து,பின்னர்அடுத்து வரும் கிலோ மீட்டர்களுக்கு தொகை படிப்படியாக குறைந்துக்கொண்டே வருகிறது.

ஆட்டோ மற்றும் காமன்கேப் இருந்தாலும்,பைக்டாக்சி என்பது ஒரு புது முயற்சியாக பார்க்கப்படுவது மட்டுமில்லாமல்,பேருந்து இல்லாமல் அவதிப்படும்  நேரத்தில் உண்மையில் இவர்களுடைய பங்கு அதிகமாக உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

என்னதான் ஷேர் அதே வேளையில் மாற்று திறனாளிகள் என்பதால்,எந்த தயக்கமும் அடையாமல் தங்களுடன் தைரியமாக பயணிக்கலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.காரணம்  அவர்கள் அனைவரும் நல்ல பயற்சி பெற்று திறமையாக வாகனத்தை ஒட்டுபவர்கள்.

இதனை தொடர்ந்து தற்போது, தமிழக அரசும், போக்குவரத்து துறையும் இதற்கு முழு ஆதாரவு கொடுக்க வேண்டும் என மாற்று திறனாளிகள் தரப்பில் கோரிக்கை  வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் பயணிகளும், மா உலா மீது  நம்பிக்கை  வைத்து பயணம்  செய்ய  தொடங்கி உள்ளனர்.

மாற்றுத்திறனாளி சிலர்,இயலாமையை காரணம் காட்டி மற்றவர்களிடம் கையேந்தும்  நிலைமையில்அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு மா உலா தற்போது மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

இவர்களை மக்கள்  வெகுவாக  பாராட்டி வருகின்றனர்.


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

There are 1 comments

  1. Avatar
    அஹ்மத் |

    சேவை மனப்பான்மை மற்றும் தியாக உணர்வுடன் கூடிய இதனை ஊக்கப்படுத்தலாமே!

    Reply

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: