Thursday, April 18, 2024

நீயா..! நானா.. தொடரும் பந்தயத்தால் : பயணிகள் அச்சம்!!

Share post:

Date:

- Advertisement -
அதிரையை அடுத்த பட்டுக்கோட்டையிலிருந்து – தஞ்சாவூர் செல்லும் வழியில் அவ்வப்போது பேரூந்து விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்த விபத்துகளுக்கு காரணம் பேரூந்து ஓட்டுனர்களின் கவனக்குறைவும் போட்டியும் தான் என்றால் மிகையல்ல.
இன்று காலை 11.30 மணியளவில் தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டைக்கு இரண்டு தனியார் பேருந்துகள் ஆரம்பம் முதலே ஒருவருக்கொருவர் போட்டி போட்டு முந்திக் கொண்டு வந்தனர். அதில் ஒன்று அரசுப் பேருந்து. பட்டுக்கோட்டையை அடுத்த கரம்பயம் பகுதிக்கு வந்ததும் இரண்டு பேருந்துகளும் அசுர வேகத்தில் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு வந்தனர்.
அரசு பேரூந்து முன்னே செல்ல, பின்புறம் தனியார் பேரூந்து, அரசுப் பேரூந்தை முந்திச் செல்ல முயன்றது. கத்தரிக்கொல்லைச்சாவடி  நிறுத்தத்தில் அரசுப் பேரூந்தை தனியார் பேரூந்து முந்திக் செல்ல நினைத்த சமயத்தில் எதிரே கார் ஒன்று அவ்வழியே வந்ததால் செய்வதறியாது திகைத்த பேரூந்து ஓட்டுனர் பேரூந்தை கட்டுக்குள் கொண்டு வர சாலையின் இடது புறம் நிறுத்த முயற்ச்சிக்கும் பொழுது, மழையின் காரணத்தினால் பேரூந்தின் பிரேக் சரிவர இயங்காமல் மணல் பகுதிக்கு இழுத்துச் சென்றதால் பயணிகள் கூச்சலிட்டனர். இருப்பினும் பேரூந்தில் இருந்த பயணிகள் யாரும் காயமின்றி தப்பினர்.
தொடர்ந்து  இந்த வழித்தடத்தில்  போட்டி போட்டு செல்ல முனையும் பேரூந்து ஓட்டுனர்களை கண்காணித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வேதனையோடு தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...