Friday, March 29, 2024

நிலக்கரி இறக்குமதிக்கு எதிரான போராட்டம், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு..!

Share post:

Date:

- Advertisement -

புதுவை மாநிலம் காரைக்கால் “மார்க்” தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதால் நாகூர், பட்டினச்சேரி, பனங்குடி சுற்றுவட்டார மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிராக பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் பல வகையிலும் போராட்டங்களை நடத்தின. மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் துறைமுக அதிகாரியிடம் பல முறை பேசினார். இதன் ஆபத்து குறித்து சட்டமன்றத்திலும் பேசியுள்ளார்.

நாகையில் கடந்த பிப்ரவரி 28 அன்று மஜக-வின் 3 ஆம் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில், நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக அனைவரையும் ஒருங்கிணைத்து, கறுப்புக் கொடியேந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.

அதன்படி தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அனைத்து நிலக்கரி இறக்குமதி எதிர்ப்பு குழுக்களையும் ஒருங்கிணைத்து “ஒருங்கிணைந்த_நிலக்கரி_இறக்குமதி_எதிர்ப்பு_குழு” வை அமைத்து ஏப்ரல் 6 அன்று நாகூரில் போராட்டம் நடைபெறும் என்றும், இதில் அனைத்துக் கட்சிகள், அமைப்புகள் பங்கேற்பார்கள் என அறிவித்தார்.

அதனை தொடர்ந்து கடந்த 10 நாட்களாக நாகூர், பனங்குடி, பட்டினச்சேரி பகுதிகளில் அனல் பறக்கும் பரப்புரைகள் நடைபெற்றது.

ஒவ்வொரு  வீதி முனையிலும் வைக்கப்பட்ட போராட்ட விளம்பரங்கள் மக்களை உசுப்பின.

ஏப்ரல் 5மதியம் முதல் அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடிகள் ஏற்றப்பட்டது. வீதிகளில் கருப்பு கொடிகள் நடப்பட்டன. ஆட்டோக்களில் விளம்பரங்கள் மின்னியது.

அப்துல்_கலாம் மக்கள்_இயக்கம் சார்பில் பாரதி செந்தமிழன் கலை_நிகழ்ச்சி-களை நடத்தி எழுச்சியை பெருக்கினார்.

வணிக_அமைப்புகள் சார்பில் மதியம் 2 மணி முதல் 7 மணி வரை அரை நாள் கடையடைப்பு நடத்தி போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.

4 மணிக்கு மேடையில் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின, சரியாக 4:30 மணிக்கு தமிமுன் அன்சாரி MLA மேடைக்கு வந்ததும், நிகழ்ச்சிகள் தொடங்கியது.

மஜக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஹமீது ஜெகபர் வரவேற்புரையாற்ற, போராட்டக்குழு_உறுப்பினர் #சாகுல் அவர்கள் முழக்கங்களை எழுப்ப, மக்கள் ஆரவாரமாக முழங்கினர்.

5 மணி நெருங்கிய போது, புதிய பேருந்து நிலையம் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது. பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் என எங்கும் எழுச்சியாய் இருந்தது.

A.S அலாவுதீன் பேசும்போது நாகூர் மக்கள் நிலக்கரியால் படும் அவஸ்தைகள் குறித்தும் தமிமுன் அன்சாரி MLA எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக பேசினார்.

அடுத்து சமூக_மக்கள்_கட்சி தலைவர் #அம்பி_வெங்கடேஷ்  நிலக்கரி எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக செயல்படுவோம் என்றார்.

அடுத்து பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் MGK_நிஜாமுதீன் அவர்கள் பேசும்போது, நிலக்கரி இறக்குமதி தொடர்ந்தால், அடுத்து நாங்கள் வீரியமாக களமாடுவோம் என்றார்.

இயக்குனர்_கெளதமன் அவர்கள், தமிழ் நிலத்தில் நடந்து வரும் போராட்டங்கள் குறித்து பேசினார். இன்று நாகூருக்கு தான் வந்தபோது நிலக்கரியால் பாதித்த மக்களின் துயரங்களை கேட்டதாக கூறினார்.

அப்போது கூட்டம் கட்டுக் கடங்காமல் திரண்டதால், பத்திரிக்கையாளர்கள் பகுதி நெரிசலுக்கு உள்ளானது. அருகில் உள்ள கட்டிடங்களிலும் மக்கள் ஏறி நின்றனர்.

பெருத்த ஆரவாரங்களின் மத்தியில், சீமான் பேசத் தொடங்கினார். மோடி அரசு, தமிழக மக்களுக்கு எதிராக செய்து வரும் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார். மீத்தேன், ஹைட்ரோ_கார்பன், என தமிழகத்தை சுரண்டும் திட்டங்களை கண்டித்ததோடு இனியும் “மார்க்” துறைமுகம் நிலக்கரி இறக்குமதியை தொடர்ந்தால் கடுமையான போராட்டம் வெடிக்கும் என எச்சரித்து, அனைவரையும் ஒருங்கிணைத்த தமிமுன் அன்சாரி MLA அவர்களையும் பாராட்டினார்.

பிறகு மெரினா_போராட்டக்_குழு ஒருங்கிணைப்பாளர் ஜல்லிக்கட்டு_ஜலீல் பேசினார்.

மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியை தடை செய்ய வேண்டும் என்ற ஒற்றை தீர்மானம் முதன்மை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலைய மூட வேண்டும்,  நியுட்ரினோ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காவேரி டெல்டா மாவட்டங்களை “பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக” அறிவிக்க வேண்டும் என மொத்தம் 5 தீர்மானங்களை நாகூர் வணிகர் சங்க செயலாளர் பி.ஆர். ரவி வாசித்தார்.

நிறைவாக பேசிய தமிமுன் அன்சாரி MLA அவர்கள், தான் சட்டமன்ற தேர்தலின் போது கூறியபடி, இதற்கான போராட்டக்களத்தை கட்சி வேறுபாடு, சாதி மத வேறுபாடின்றி இணைத்து உருவாக்கி உள்ளதாகவும் இதில் ஒரு இடத்தில் கூட மஜக கொடியை காட்டவில்லை என்றும் இதற்காக யார் போராடினாலும் அதை ஆதரிப்பதாகவும் இந்த போராட்டக்களத்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் MGK நிஜாமுதீன் அவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்றும் தாங்கள் அவர் பின்னால் அணி திரள்வதாகவும், நாங்களும் களத்தில் இறங்குவோம் என்று  கூறினார்.

நிறைவாக, சாகுல் அவர்கள் நன்றி கூற 7 மணி அளவில் ஆர்பாட்டம் நிறைவுற்றது.
நாகூர் வரலாற்றில் இதுவரை இப்படிப்பட்ட மக்கள் திரளோடு, ஒரு உரிமைப் போராட்டம் இதுவரை நடந்ததில்லை எனவும், அனைத்து சாதி-மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக பங்கேற்ற முதல் போராட்டம் என்றும் பத்திரிக்கையாளர்கள் பாராட்டினர்.
ஒரு புதிய திருப்பு முனையை ஏற்படுத்திய மனநிறைவோடு, நாகூர் மக்கள் நம்பிக்கையோடு புறப்பட்டனர்.

 

Source:-இளம்பிறை_செய்தியாளர்_குழு
#நாகூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...