Thursday, April 18, 2024

‘சுடப்படும் இடத்தை சொல்லுங்கள் நான் தயார்’ – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு அசாதுத்தீன் உவைசி சவால் !

Share post:

Date:

- Advertisement -

“குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை சுட வேண்டுமெனில் என்னை சுடுங்கள்” என்று ஆல் இந்தியா மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமின் (AIMIM) தலைவர் அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் ஆத் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிவருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது.

டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் தேசிய அளவில் கவனம் பெற்றன. டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. பா.ஜ.க-வுக்கு எதிரான வாக்குகளை அறுவடை செய்ய காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி பின்னடைவைச் சந்தித்து வருகிறது. `இது பா.ஜ.க மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியின் வெளிப்பாடு’ என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இது இப்படியிருக்க டெல்லியில் பிரச்சாரத்தில் பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர், ஷாகீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டங்களைக் கடுமையாகச் சாடினார். அப்போது மேடையில், `துரோகிகளைக் கொல்லுங்கள்’ எனப் பேசியிருந்தார். அதேபோல் பா.ஜ.க எம்.பி பர்வேஷ் வர்மா பேசியதும் சர்ச்சையானது.

“குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் உங்களுடைய வீடுகளுக்குள் புகுந்து உங்கள் மனைவி மற்றும் சகோதரிகளைப் பாலியல் வன்கொடுமை செய்வார்கள்” எனப் பேசியிருந்தார். பிரசார மேடையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மாவின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் அனுராக் தாக்கூரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அசாதுத்தீன் உவைசி, மும்பையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது, “என் தாய்மாரும், என் சகோதரிகளும் கடுங் குளிரிலும் தெருவில் நின்று போராடுகிறார்கள். அவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியது கடும் கண்டத்துக்குரியது. நீங்கள் கூறியதுபோல் சுட்டுத்தள்ள வேண்டுமெனில் நான் தயார் என்னை சுடுங்கள் எந்த இடம் என்று கூறுங்கள் நான் அங்கே வருகிறேன். எனக்கு எந்தவித அச்சமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...