17/01/2020 கோவையில் நடைபெற்று வரும் கால்பந்து தொடரில் கோவை, திருச்சி, தஞ்சாவூர், போத்தனூர், சென்னை, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம் வெஸ்டர்ன் FC அணியினரும் கலந்து கொண்டு விளையாடினர்
இன்று காலை நடைபெற்ற காலிறுதி போட்டியில் வெஸ்டர்ன் FC VS பாலா மெமோரியல் அணியினரும் மோதினர். இதில் இரு அணிகளும் 2-2 என்ற சம நிலையில் விளையாடி முடித்தனர். பிறகு டை பிரேக்கர் முறையில் 3-2 என்ற கோல் அடித்து அறையிறுதி சுற்றுக்கு வெஸ்டர்ன் FC அணி முன்னேறியுள்ளனர்.