ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் குடியரசு தின விழா!!

326 0

நாடு முழுவதும் இன்று 70வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் ஹாஜி MSM. முஹம்மது அபூபக்கர் தலைமை வகிக்க, சங்கத்தின் துணைத்தலைவர் ஹாஜி A.M. மன்சூர் அவர்கள் முன்னிலை வகித்தார்.

முன்னதாக இவ்விழாவின் தொடக்கத்தில் M.S. சஹல் கிராத் ஓதிய பின், SISYA வின் தலைவர் S.அஹமது அனஸ் வரவேற்புரை ஆற்றினார்.

பின்னர் நாட்டின் தேசிய கொடியினை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் ஹாஜி MSM. முஹம்மது அபூபக்கர் ஏற்றி வைத்ததும் இவ்விழாவில் கலந்துக் கொண்ட சிறப்பு விருந்தினர்கள் அதிரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர். அ. அன்பழகன் MBBS,DCH, மற்றும் காதிர் முஹைதீன் பள்ளி முன்னால் தலைமையாசிரியர் ஹாஜி SKM. ஹாஜா முஹைதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ஷம்சுல் இஸ்லாம் சங்க இணைச் செயலர் ஹாஜி A.அப்துல் ரஹீம் அவர்கள் நன்றியுரை கூற நாட்டுப் பண் மற்றும் து ஆவுடன் இனிதே நிகழ்ச்சி நிறைவுற்றது.

ஷம்சுல் இஸ்லாம் சங்க குடியரசு தின நிகழ்ச்சியை MF.முஹம்மது சலீம் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: