Thursday, April 25, 2024

வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாதவைகள் எவை தெரியுமா.??

Share post:

Date:

- Advertisement -

தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ அல்லது காபி போன்று ஏதாவது ஒன்றை சாப்டவில்லையெனில் உயிரே போகும் அளவிற்க்கு பலர் வருத்தமடைவதை வாடிக்கையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இப்படி வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் தீங்குகளை அறிவோம் வாருங்கள்.

காபி:

காபியை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதில் உள்ள தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீரை குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுவது நல்லது.

டீ:

காபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால் இதனை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.

தயிர்:

தயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை எற்படுத்திவிடும்.

வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால் இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் எற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.

தக்காளி:

தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.

ஆல்கஹால்:

பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதில் உள்ள சேர்மங்கள் வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால் வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு உடல் மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்

காரமான உணவுகள்:

காரமான உணவுகள் எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ள கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு:

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின், குடல் வாலைத் தூண்டி அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து நெஞ்செரிச்சலை எற்படுத்திவிடும்.

ஆக காலையில் எழுந்தவுடன் மேற்கண்ட உணவுகளை தவிர்த்து, தண்ணீர் அல்லது நீராகாரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பருகி ஆரோக்கிய வாழ்வுக்கு வித்திடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...