வாட்ஸ் அப்பில் குரூப் வீடியோ மற்றும் ஆடியோ காலிங் வசதி அறிமுகம்!!

306 0

குறுந்தகவல்களை பகிர பயன்படுத்தப்படும் சமூக வலைதளமான வாட்ஸ் அப், பயனாளர்களை கவர அவ்வப்போது புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

குறுந்தகவல்களை பகிர பயன்படுத்தப்படும் சமூக வலைதளமான வாட்ஸ் அப், பயனாளர்களை கவர அவ்வப்போது புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் மேம்பட்ட ஒரு அம்சமாக, குரூப் வீடியோ மற்றும் ஆடியோ காலிங் சேவையை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பரிசோதனை அளவில் இருந்த இந்த வசதி முதல் முறையாக, பயனாளர்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரே நேரத்தில் அதிகபட்சமாக நான்கு பேருடன் வாய்ஸ் கால் மூலமாகவும் வீடியோ கால் மூலமாகவும் பேச முடியும். உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் வாட்ஸ் அப் பயனாளர்கள் இந்த சேவையை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: