Friday, April 19, 2024

ரேஷன் கடைகளில் 30 சதவீதமாக குறைக்கப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகம்: விரைவில் முற்றிலும் நிறுத்த முடிவு

Share post:

Date:

- Advertisement -

சேலம்: தமிழக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விநியோகத்தை 30 சதவீதமாக குறைத்துள்ளனர். விரைவில் இதன் சப்ளையை முற்றிலும் நிறுத்திட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் 1.90 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு மானிய விலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில் ஆகியவற்றை அரசு வழங்கி வருகிறது. இதில், தற்போது ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். இதனிடையே மத்திய அரசு, ரேஷன் பொருட்களுக்கான மானியத்தை பெருமளவு குறைத்து வருகிறது. இதன் காரணமாக அரிசி, சர்க்கரை, பருப்பு விநியோகத்தில் தமிழக அரசு தடுமாறியுள்ளது. சமீபத்தில் சர்க்கரை விலையை ரூ.25 ஆக அதிகரித்து நடவடிக்கை எடுத்தது.

இதற்கு மாநிலம் முழுவதும் மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதும், மத்திய அரசின் மானிய குறைப்பை காரணம் காட்டி, வேறு வழியில்லை என அரசு கைவிரித்தது. அத்துடன் ரேஷன் கடைகளில் உளுந்தம்பருப்பு வழங்கப்பட்டு வந்தநிலையில், அதை முற்றிலும் நிறுத்தினர். இதற்கும் மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் துவரம் பருப்பிற்கு பதிலாக கடந்த 4 மாதமாக மைசூர் பருப்பை வழங்கி வருகின்றனர். இதை ஒரு சிலர் மட்டுமே வாங்குகின்றனர். பருப்பு சப்ளையை படிப்படியாக குறைப்பதற்காக இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பதாக குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில் தற்போது, ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் மண்ணெண்ணெய் அளவை, அரசு பெருமளவு குறைத்துள்ளது. ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் 30 சதவீத அளவிற்கு மட்டுமே மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.

 சிலிண்டர் பயன்படுத்தாத குடும்ப அட்டைதாரருக்கு மானிய விலையில், லிட்டர் ரூ.14 என்ற அடிப்படையில் 5 லிட்டரும், ஒரு சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு 2 லிட்டரும் என்ற கணக்கில் ரேஷனில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் ஒட்டுமொத்த குடும்ப அட்டைதாரர்களான 1.90 கோடியில் 35 சதவீதத்தினர் மண்ணெண்ணெய் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் மானியத்தை மத்திய அரசு குறைத்ததன் காரணமாக மண்ணெண்ணெய் சப்ளையை படிப்படியாக குறைத்து, முற்றிலும் நிறுத்திட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதன்படியே கடந்த 3 மாதமாக மண்ணெண்ணெய் சப்ளை 30 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் நடப்பு மாதத்திற்கான மண்ணெண்ணெய் சப்ளை இன்னும் வழங்கப்படவில்லை.

இதுபற்றி வழங்கல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தமிழகம் முழுவதும் மண்ணெண்ணெய் சப்ளை குறைக்கப்பட்டுள்ளது. சுமார் 600 கார்டுகளுக்கு 1800 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்ட இடத்தில், வெறும் 600 லிட்டர் மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது. ஒரு மாதம் ஒருவருக்கு வழங்கப்பட்டால், அடுத்த மாதம் அவருக்கு இல்லை என்ற நிலையில் தான் விற்பனையாளர்கள் கொடுக்கிறார்கள். வரும் மாதங்களில் மண்ணெண்ணெய் விநியோகத்தையே நிறுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை,’’

என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...