முக்காடு போட்ட மூதேவிகளும் வாழ்வை தொலைத்த ஸ்ரீ? தேவிகளும் வாழும் கூடாரமாய்  முகநூல்!!!

658 0

புதிய உறவுகளை நல்ல வரவுகளாக சித்திரிக்கும் போலி முகமே முகநூல்.

மெய் முகத்தை கூட பார்க்காது முகநூல் எழுத்தில் மனதை அலைய விடும் மூடர்களே அதிகமாக  முகநூலில்  உலா வருகின்றனர்.

மதத்தை எழுத்தாக வடித்து விட்டு  மார்க்க கடமை செய்து கொண்டிருப்பதாக கருதும்  மார்க்க அறிவிளி கூட்டம் முகநூலில்  ஒரு புறம்.

மானத்தையே தானமாக நினைத்து    பிறரின் இன்பாக்சில் இன்பம் தேடும்  காமக் கூட்டமோ மறு புறம்.

நுழையும் இல்லத்தில் முகமன் கூறாதவன் பிறரின் முகநூல் இன்பாக்சில் நலம் விசாரிக்கும் தோரணையில் காமத்திற்க்கு கடிதாசி அனுப்பும் அயோக்கியர்கள் முகநூலில்  ஏராளம்.

அவைகளை ரசிக்கும் ஏமாளி நாடக மங்கையர்களும் குடும்ப குத்துவிளக்குகளும் முகநூலில் தாராளம்.

அன்புடையானை இல்லத்தில் உறங்கவிட்டு அன்புக்கு அலைவது போல் அறிக்கை போடும் பெண்  கவிஞர்கள் முகநூலில் ஏராளம்

அவைகளை லைக் செய்வதையே   அறிவார்த்த செயலாக காட்டும் ஆடவர் கூட்டமோ முகநூலில் தாராளம்.

முகநூலில் நல்ல கருத்தால் பிறரை செதுக்குவதை விட தன் இன்ப வாழ்வை இதில் நுழைந்து  தொலைத்த ஆண் பெண் கூட்டமே   முகநூலின் தாராளம்.

பாட்டியை கூட முகநூலில் Sister என்று ஆடவன் அலைப்பான் அது போல் தாத்தனை கூட முகநூலில் மங்கை Brother என்று அழைப்பாள்.

அருகில் இருக்கும் உடன் பிறப்புகளுக்கு வாரம்  ஒரு முறை கூட முகமன் வணக்கம் வாழ்த்து கூறாத பலர்கள் முகநூலில் மாத்திரம் குப்பை குவியலை  போல் அன்றாடம் டைம் லைனில் வாழ்த்துக்களை வாரி வாரி கொட்டுவார்கள்

பூட்டிய அறையில் இருந்து கொண்டு ஏசி ரூமில் படுத்து கொண்டு அதிகாலை பற்களை கூட துலக்காது சமுதாய அவலங்களை வீரியத்தோடு தெளிக்கும் பலர்களுக்கு முகநூலே போராடும் போர்க்களமாய் கற்பனையில் தோணுகிறது.

அதில் வேடிக்கை என்னவெனில் அதில்  அநேகமானோர் சமூக களத்தை நேரடி  கண்ணால் கூட கண்டிருக்க மாட்டார்கள்.

சுருங்க சொன்னால் முகநூலில் முக்காடு போட்ட மூதேவிகளே அதிகம்

வாழ்வை தொலைக்கும் ஸ்ரீதேவிகளே?  அதிகம்

அனுபவத்துடன்  J .இம்தாதி

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: