நெய்வேலியில் 14 வயதிற்குட்பட்ட (Under14) மாவட்ட வாரியான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.
இத் தொடரில் தஞ்சை மாவட்ட அணிக்காக அதிரையை சேர்ந்த 5 பேர் தேர்வாகி விளையாடி வருகின்றனர்.
இன்று தஞ்சை – தர்மபுரி அணிகள் மோதிய போட்டியில் தஞ்சை மாவட்ட அணி 4-3 என்ற கோல் கனக்கில் தர்மபுரி அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் தஞ்சை மாவட்ட அணிக்கு நமதூர் அதிரையை சேர்ந்த ஆதிஃப் 2 கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு முத்தாய்ப்பாய் இருந்தது குறிப்பிடதக்கது.
மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுகளில் பங்கு கொண்டு திறமையை வெளிக்கொணர்ந்து வரும் நமதூர் இளம் வீரர்கள் நாளைய கால்பந்து, கிரிக்கெட் போன்ற நட்சத்திர விளையாட்டுகளில் மற்ற ஊர்களுக்கு மத்தியில் ஒரு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்று ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ பாராட்டி வாழ்த்துகிறது.
Assalamu Alaikum,
Masha Allah. Very Glad to hear this un belivable message.
If you put all details about our native bross it vl be too good to identify them an can encourage them to improve there interest, by giving some gift n advice from our side.
Nice article, i like it!