போலியோ சொட்டு மருந்து முகாம் 2018

284 0

அதிரை : ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் இரண்டு கட்டங்களாக நடைப்பெற்று வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் சுகாதாரத்துறை சிறப்பாக செய்து வருகின்றது.

அந்த வகையில் இவ்வாண்டின்  முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்  ஜனவரி 28ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிரை அரசு பொது மருத்துவமனை, பேருந்து நிலையம், ஷம்சுல் இஸ்லாம் சங்கம், அரசு மேல் நிலைப்பள்ளி எண்-1, மேலத்தெரு தாஜுல்  இஸ்லாம் சங்கம், கடற்கரை தெரு உள்ளிட்ட  நகரின்  பல பகுதிகளில் இம்முகாம் நடத்த உள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது .

எனவே ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மறவாமல் போலியோ சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

இதற்கு  முன்னர் போலியோ சொட்டு மருந்து  கொடுக்கபட்ட குழந்தைகளுக்கும் அவசியம்  கொடுக்க வேண்டும் என மருத்துவர்களால் அறிவுறுத்தபட்டிருப்பதால்  தவறாமல் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி போலியோ இல்லா உலகை உருவாக்க வேண்டுகிறோம்.

இரண்டாம்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற மார்ச் 11 ஆம் தேதி நடத்தப்படும் என்று தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: