Thursday, March 28, 2024

தண்ணீர்..! தண்ணீர்..!

Share post:

Date:

- Advertisement -

தண்ணீர் இன்று மனித சமூகத்திற்க்கு மட்டுமின்றி அனைத்து உயிரினங்களுக்கும் மிக அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது.

நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்றி அமையாது ஒழுக்கு!

பொருள்: எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

உணவு இல்லாமல் கூட பல நாட்கள் மனிதனால் உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் ஓரிரு நாட்கள் கூட மனிதனால் உயிர் வாழ முடியாது. எத்தனை வளமிருந்தாலும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு குறுக்கே நிற்பது தண்ணீர் பிரச்சனைதான். காவிரி, பாலாறு, தென்பெண்ணையாறு என வெளிமாநில நதிகளைத்தான் நீர் ஆதாரத்துக்காக நம்ப வேண்டியிருக்கிறது.

50 ஆண்டுகளுக்கு முன்பு நமதூரில் இருந்த கிணறுகளில் தண்ணீரை சாதாரணமாக அள்ளலாம் அந்த அளவிற்கு தண்ணீர் நிறைந்து காணப்படும்.

மேலும் அள்ள அள்ள நீர் ஊறிக்கொண்டே இருக்கும். ஆனால் இன்று, கார்ப்பரேஷன் தண்ணீர் ஒருநாள் விட்டு ஒருநாள் நம் பகுதிகளுக்கு வருகிறது என்பது சிறு ஆறுதல் தரக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது,

தமிழ்நாட்டில் விவசாயம் என்பதே இல்லாமல் போனாலும் ஆச்சர்யமில்லை. ஆனால், தமிழ்நாட்டில் தண்ணீர் இப்போது விற்பனை பொருளாக மாறிவிட்டது.

தண்ணீரை கூட பணம் கொடுத்து வாங்கும் அவல நிலை ஏற்பட்டுவிட்டது.

பருவமழை பொய்த்தது என்பது நமது தண்ணீர் தாகத்திற்கு காரணம் அல்ல. பெய்த மழை நீரை நாம் சேமித்து வைத்து கொள்ள எந்த ஏற்பாடும் செய்து கொள்வதில்லை என்பதே உண்மை.

மழைக்காலங்களில் குளங்கள், ஏரிகள் இருந்தும் அது சரியான முறையில் பராமரிப்பு இல்லாமல் இருக்கின்றது.

நமது அலட்சியத்தால் தண்ணீரை சேமிக்காமல் இருந்தால் என்ன ஆகும்? நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. நிலத்தடி நீரை நாம் முற்றிலுமாக இறைத்துவிட்டால், அந்த இடத்திற்கு ஆழ்நிலை உப்புத் தண்ணீர் வந்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்த தண்ணீர் கடல் நீர் போலத்தான். நமது அன்றாட வாழ்வுக்கு பயன்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கின்றது.

இந்நிலையில் கர்நாடகாவில் தண்ணீர் அதிகரிப்பால் காவேரி நீரை திறந்துவிடப்பட்டுள்ளது. அது தமிழ்நாட்டிற்கு வந்தடைந்தது, அதை போன்று தஞ்சைக்கும் வருகை தருகிறது. அதனை வரவேற்று தண்ணீரை சேமிக்க வேண்டும்.

அடுத்த தலைமுறைக்காக சொத்து செல்வம் சேர்ப்பதைவிட உயிர் வாழும் அவசியமாக இருக்கும் தண்ணீரை சேமிப்பதே மேல்….

நீரை சேமிப்போம், வருங்கால தலைமுறையை பாதுகாப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...