சுவாதி முதல் அஸ்வினி வரை! பதறவைக்கும் கொலைகள்!!

189 0

நுங்கம்பாக்கம் சுவாதி தொடங்கி விழுப்புரம் நவீனா, கே.கே நகர் அஸ்வினி வரை ஒரு தலைக்காதல் கொலைகள் தொடர்கதையாகி வருகின்றன.

காதலிக்க மறுத்த காரணத்தால் ஒரு தலைக்காதலர்கள் பெண்களை கொடூரமாக கொலை செய்யும் நிலை அதிகரித்து வருகிறது.

சுவாதி

கடந்த 2016 யூன் 24-ஆம் திகதி சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி என்று கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

நவீனா

பள்ளி மாணவி நவீனாவை, விழுப்புரத்தை சேர்ந்த செந்தில் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்த நிலையில் காதலை நவீனா ஏற்க மறுத்துவிட்டதால் தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டு, நவீனாவை கட்டிப்பிடித்து செந்தில் எரித்து கொன்று விட்டான்

சோனாலி

கரூர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த சோனாலியை, அதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவன் உதயகுமார் வகுப்பறையில் நுழைந்து கட்டையால் அடித்து கொலை செய்தார்.
இதற்கு காரணமும் ஒருதலை காதல் தான்.

தன்யா

கோவையை சேர்ந்த தான்யாவை ஒருதலையாக காதலித்த இளைஞர் ஜாகீர் கத்தியால் சராமாரியாக குத்தி கொலை செய்தார்.
இந்துஜா

கடந்த ஆண்டு ஒருதலைக்காதலுக்கு வேளச்சேரியை சேர்ந்த இந்துஜா பலியாகியுள்ளார். காதலிக்க மறுத்தார் என்பதற்காக பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்டார்.
சித்ரா தேவி

திருமங்கலத்தை 14 வயது மாணவி சித்ராதேவி ஒருதலைகாதலால் பெட்ரோலை ஊற்றி கொலை செய்யப்பட்டார்
அஸ்வினி

சென்னை கே கே நகரில் நேற்று கல்லூரியில் படித்து வந்த அஸ்வினியை விரட்டி விரட்டி கத்தியால் கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளான் அழகேசன் என்ற கொடூரன்.
பெண்களை துரத்தித் துரத்தி சீண்டினால் தான் காதல் பிறக்கும் என்று தவறாக போதிக்கும் திரைப்படங்கள், நம்மை காதலிக்காத பெண் வேறு யாரையும் காதலிக்கக் கூடாது என்பதையும் விரிவாக விளக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியவையும் இது போன்ற கொலைகளுக்கு முக்கிய காரணம் என சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: