கலைஞர் மறைவு : அதிரையும் வெறிச்சோடியது!!

408 0

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிறுநீரக தொற்று மற்றும் ரத்த அழுத்தம் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவ்வப்போது அவரின் உடல் நிலை தேறி வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதனையடுத்து தமிழகம் முழுதும் கடைகள் அடைக்கப்பட்டு மறைந்த முன்னால் முதல்வருக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டு வருவது போல, அதிரையிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதனால் அதிரை நகரமும் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது.