ஏரிப்புரக்கரைக்கு உட்பட்ட பிலால் நகர் பகுதியின் மிகப்பெரிய அவலம் நிலை..!

384 0

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புரக்கரைக்கு உட்பட்ட பகுதியான பிலால் நகர் பகுதியில் மிகப்பெரிய அவல நிலையால் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள்
தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அப்பகுதியில் இன்று வரை ஒரு சாலையும் சீரமைக்கப்படவில்லை என அப்பகுதியினர் குற்றம்சாற்றியுள்ளனர்.

அப்பகுதியில் இன்றுவரை குப்பைகள் அல்லப்படாமல் டெங்கு காய்ச்சல் உருவாகும் இடமாக மாறிவருகிறது.
குப்பைத் தொட்டிகள் இருந்தும் அப்பகுதியில் குப்பைகள் பரவி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அதிரையில் எந்த பகுதியிலும் காணப்படாத அளவிற்கு சாலைகள் பழுதாகியும், குடிநீரில் கழிவு நீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை உடனடியாக சுத்தம் செய்து , சாலை அமைக்கும்படி அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: