என்ன நடக்கிறது பாஜகவில் ?.. மோடி, அமித் ஷாவை கேள்வி கேட்கும் கட்கரி !

176 0

பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு எதிராக மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பேசியுள்ளார்.

பாஜக கட்சிக்குள் உருவாகி இருந்த சிறிய பூசல் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிய தொடங்கி உள்ளது. பாஜகவின் தொடர் தேர்தல் தோல்விகளால் தற்போது அந்த கட்சிக்குள் இரண்டு அணிகள் உருவாகி இருக்கிறது.

பாஜகவில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பிரதமர் மோடிக்கு பதிலாக 2019 தேர்தலில் முன்னிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்தது. தற்போது நிதின் கட்கரியின் செயல்பாடுகளும் கூட அப்படித்தான் இருக்கிறது.

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விதான் தற்போது மிக முக்கியமான விவாதமாக உருவெடுத்து உள்ளது. மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று சில குரல்கள் எழுந்தது. இவருக்கு ஆர்எஸ்எஸ் தரப்பில் பெரிய ஆதரவு இருப்பதாகவும் தகவல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: