அதிரை AFCC கிரிக்கெட் தொடரின் இரண்டாம் நாள் முடிவுகள் !!

355 0

அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்(AFCC) நடத்தும் 14-ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி நேற்று 06/04/2019 அதிரை கிராணி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் இன்றைய(07/04/2019) இரண்டாம் நாள் ஆட்டத்தில் காலை TR CC அணியினரும் செருவாவிடுதி அணியினரும் விளையாடினர். இதை முதலில் பேட் செய்த செருவாவிடுதி அணி 88 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய TR CC அணி, 7 விக்கெட் இழந்து 89 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மதியம் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அதிரை WCC அணியினரும் Sky CC அணியினரும் மோதினர். இதில் முதலில் பேட் செய்த WCC அணி 104 ரன்கள் குவித்தது. 105 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய Sky CC அணி 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

குறிப்பு : அதிரை AFCC அணி நடத்தும் இத்தொடர் குறித்த தகவல் மற்றும் ஆட்ட முடிவுகள் தினமும் அதிரை எக்ஸ்பிரஸில் பதிவேற்றம் செய்யப்படும்.

நாளைய(08/04/2019) தினம் ஆட இருக்கின்ற அணிகள் :

AFCC GREEN vs PCC PKT

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: