அதிரையில் சிறப்பாக நடைபெற்ற தூய்மையன அதிரையை உருவாக்குவோம் கருத்தரங்க நிகழ்ச்சி!!

122 0

அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் திருப்பூர் பாதுகாப்பு இயக்கம் இணைந்து நடத்தும் துமையான அதிரையை உருவாக்குவோம் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் இன்று கதீஜா மஹாலில் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கியது.

இதில் திருப்பூர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக தூய்மை பற்றிய பல்வேறு பயனுள்ள விஷயங்கள் பொதுமக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்த கருத்தரங்கத்தில் தண்ணீரில் கரையக்கூடிய கேரிபேகினை மக்கள் முன்னிலையில் அறிமுகம் செய்து செய்முறையில் செய்து காட்டினர்.

அதுமட்யின்றி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து வைக்க வேண்டும் அதனை சேகரித்து குப்பை கூடங்களில் போட வேண்டும் என பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்னர்

இந்த கருத்தரங்கத்தை டாகடர்.H. ஹக்கீம் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்த கருத்தரங்கத்தில் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4கின் தலைவர் திரு.வ. விவேகானந்தம் தலைமை தாங்கினார்.

இந்த கருத்தரங்கத்தில் சுற்றுச்சூழல் மன்றத்தின் துணைத்தலைவர் ஜனாப்.S. முஹம்மது இப்ராஹிம் அவர்களும், மன்றத்தில் துணை செயலாளர் ஜனாப்.மரைக்கா K. இத்ரீஸ் அஹமது அவர்களும் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த கருதரங்கில் ஊர் பொதுமக்கள்,சங்கங்கள்,இளைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பயண் அடைந்தனர்..

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: