அதிராம்பட்டினம் செடியன் குளத்தில் மணிக்கணக்கில் உற்சாகக் குளியல் போடும் பள்ளிச்சிறுவர்கள்…

408 0

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் பொதுமக்கள் குளித்து மகிழும் குளங்களில் ஒன்று செடியன் குளம். சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்கது.

இக்குளத்தில் தற்போது போதுமான அளவில் நீர் நிரம்பி பளபளப்பாக காட்சியளிப்பதால், குளிப்பதற்கு பொதுமக்களை சுண்டி இழுத்து வருகிறது.

தினமும் இக்குளத்தில், பொதுமக்கள் குளித்து மகிழ்வது ஒருபுறமிருந்தாலும், தொடர் விடுமுறையில் பொழுதை கழித்து வரும் பள்ளிச்சிறுவர்கள்  உற்சாகமாகக் குளித்து வருவது அப்பகுதி வழியே கடந்து செல்லும் பொதுமக்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. குளத்தில் டைவ் அடித்தும், நீந்திச் சென்றும், முக்குளித்தும், நேரம் போவது தெரியாமல் கண் சிவக்கும் அளவிற்கு மணிக்கணக்கில் குளித்து மகிழ்கின்றனர்.
குளித்து முடித்துவிட்டு குளத்தின் கரையில் அமைந்துள்ள நூற்றாண்டைக் கடந்து பசுமையாகவும், அதிரையின் அடையாளமாகத் திகழும், மருத்துவ குணமுடைய மருத மரத்தின் நிழலில் ஓய்வு எடுத்துச் செல்கின்றனர்.

எச்சரிக்கை:

குளத்தில் போதுமான அளவில் நீர் நிரம்பிக் காணப்படுவதால், சிறுவர்கள் தனியாகக் குளிக்க வேண்டாம். தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் இணைந்து குளிக்கவும். ஆழப்பகுதிக்கு நீச்சலடித்துச் செல்வது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: